MS Dhoni: தோனி எல்லா மேட்சிலும் விளையாட மாட்டாராமே? ரசிகர்கள் எதிர்பாரா ட்விஸ்ட்! வேற மாதிரி பிளான் போட்ட CSK
சென்னை: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனியின் (MS Dhoni) கடைசி ஐபிஎல் என பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கு வருவதால் விக்கெட் கீப்பிங் பிரச்சனையும் இருக்காது என்பதால் தோனி சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உள்ள தோனி நடப்பு தொடரில் விளையாடுவார் என்ற தகவல் அண்மையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதே நேரத்தில், தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா?
விரைவில் 45 வயதை எட்ட உள்ள தோனி, இந்த சீசனில் விளையாடுவரா இல்லையா? என்பது தொடர்பான கேள்விகள் கடந்த சில நாட்களாகவே நீடித்த நிலையில் அவர் விளையாடுவார் என்பதை சிஎஸ்கே அணி நிர்வாகம் வட்டாரங்கள் உறுதி செய்தன. அதே நேரத்த்தில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? இல்லையா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அணி நிர்வாக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்
இந்த தகவல்தான் ரசிகர்களுக்கு இடியாய் அமைந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அந்த அணியின் ஆதர்ச நாயகனாக தோனியே உள்ளார். தோனிக்காகவே சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியை பார்ப்பேன் என்று சொல்பவர்கள் பலரையும் பார்க்க முடியும். குறிப்பாக சென்னை அணி பேட்டிங் செய்யும் போது ஜடேஜாவுக்கு அடுத்த விக்கெட்டில் பெரும்பாலும் இறங்கி வந்தார்.
இதனால், ஜடேஜா அவுட் ஆகி செல்லும் போது சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம் அடையாமல், தோனி களமிறங்க போகிறார் என்று கொண்டாடுவதையே கடந்த சில சீசன்களில் காண முடிந்தது. சர்வதேச கிரிக்கெட் பொட்டிகளில் இருந்து 2020 ஆம் ஆண்டே தோனி ஓய்வு பெற்றாலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில், நடப்பு சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு தோனி ஒதுங்கி கொள்வாரோ என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங்கிற்கு பிரச்சனை இல்லை
சென்னை அணியில் சஞ்சு சாம்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்துக்கொள்வார் என்பதால், தோனி இல்லாவிட்டாலும் விக்கெட் கீப்பிங்கிற்கு பிரச்சனை இல்லை. தோனியை பொறுத்தவரை முதுகு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். எனவே அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 1 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலக கோப்பை 20 ஓவர் போட்டி நடைபெற்று வருவதாலும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் இதனை கருத்தில் கொண்டே ஐபிஎல் டைம்டேபிள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஐபிஎல் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications