ரத்தத்தில் ஊறிப்போன இனவெறி, நிறவெறி.. அர்ஜென்டினா தோல்வியை பலரும் கொண்டாடுவது ஏன்? ஷாக் பின்னணி
நியூயார்க்: நேற்று அர்ஜென்டினா ஸ்பெயின் இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வென்றது. அர்ஜென்டினாவில் தோல்வியை உலக நாடுகள் பலவும் கொண்டாடி வருகின்றன. சக லத்தீன் அமெரிக்க நாடுகளே கூட இதை கொண்டாட தொடங்கி உள்ளன.
சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜென்டினா அணி பல வெற்றிகளைக் குவித்து இருந்தாலும், அந்த அணியின் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படுத்தும் தீவிர இனவெறிப் போக்கு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய தொடர்களில் மாற்று நாட்டு வீரர்களை நோக்கி அர்ஜென்டினா வீரர்கள் செய்த இனவெறி தாக்குதல்கள், பாடிய இனவெறிப் பாடல்கள் மற்றும் ரசிகர்களின் மோசமான நடத்தைகள், லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா எவ்வாறு ஒரு தீவிர வலதுசாரி நாடாக மாறியுள்ளது என்ற விவாதத்தை உலக அரங்கில் தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது உலககோப்பை தோல்வி இந்த விவாதத்தை தீவிரமாக்கி உள்ளது
போலிப் பெருமிதம்
அர்ஜென்டினா ஒரு லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தாலும், பிரேசில் அல்லது கொலம்பியா போன்ற அண்டை நாடுகளைப் போல தங்களை இடதுசாரி நாடாக அடையாளப்படுத்திக் கொள்ள அது வரலாற்று ரீதியாக மறுத்து வருகிறது.
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் அந்நாட்டு பிரதமர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு ஐரோப்பிய குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நாங்கள் அனைவரும் ஐரோப்பாவிலிருந்து கப்பல்களில் வந்தவர்களின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு நாட்டிற்கு உள்ளே ஐரோப்பிய மக்கள் அதிக அளவில் குடியேற வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.

ஐரோப்பியர்கள் குடியேற குடியேற.. போலிப் பெருமிதம் அந்நாட்டுப் பொதுப்புத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டது. இதன் விளைவாக, அங்கிருந்த பூர்வகுடி மக்களும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களும் திட்டமிட்டு வரலாற்றிலிருந்தும் மக்கள் தொகையிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டனர்.
இந்த வரலாற்று கொடூரம்தான், இன்றைய அர்ஜென்டினாவின் தீவிர வலதுசாரி இனவாதப் போக்குக்கு அடிப்படை அஸ்திவாரமாக மாறியுள்ளது.
அதாவது அர்ஜென்டினா நாட்டை ஆக்கிரமித்து, நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த நாட்டு பூர்வகுடிகளையே ஓரம்கட்டியதுதான் தற்போது உள்ள அர்ஜென்டினியர்களின் கதை!
வீரர்களும் ரசிகர்களும் காட்டும் இனவெறி
அர்ஜென்டினா கால்பந்து கலாச்சாரத்திலும் இந்த இனவெறிப் போக்கு மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது. 2024 கோபா அமெரிக்கா வெற்றிக்குப் பிறகு, நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள் பிரான்ஸ் நாட்டு கறுப்பின வீரர்களின் ஆப்பிரிக்க வம்சாவளியை இழிவுபடுத்தும் வகையில் பேருந்தில் இனவெறிப் பாடலைப் பாடி கிண்டல் செய்தனர். இது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.
இதுமட்டுமன்றி, உலகக் கோப்பைத் தொடர்களின் போது மாற்று நாட்டு ரசிகர்களையும், கறுப்பின வீரர்களையும் அர்ஜென்டினா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. வீரர்கள் களத்திலேயே கடுமையாக நடத்துவது உண்டு.
அண்டை நாடான மெக்சிகோ மக்களை நோக்கியும் தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தை அந்நாட்டு மக்களே முன்னெடுப்பது வழக்கம்.
தீவிர வலதுசாரி அரசியல்
தற்போது அர்ஜென்டினாவில் அதிபர் ஜாவியர் மிலெயின் தீவிர வலதுசாரி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தீவிர இனவெறி, நிறவெறி கொள்கையைக் கொண்ட இந்த அரசு அங்கே மக்கள் இடையே மேலும் வெறுப்பை திணித்து வருகிறது. இது தற்போது உலகக்கோப்பையிலும் தெரிய தொடங்கி உள்ளது.
48 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பையிலேயே, முற்றிலும் வெள்ளையின வீரர்களை மட்டுமே கொண்ட அணியாக அர்ஜென்டினா தனித்து நிற்பதற்கு பின் இந்த நிறவெறிதான் காரணம்!
இதன் காரணமாக, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளும் தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. பிரேசில், மெக்சிகோ, சிலி, உருகுவே போன்ற நாடுகளின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அர்ஜென்டினா இல்லாத லத்தீன் அமெரிக்கா என்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து, அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடும் அணிகளை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்றும் இவர்கள் ஸ்பெயின் அணிக்கே ஆதரவு அளித்தனர்.
விளையாட்டு என்பது உலக மக்களை இணைக்கும் பாலம் என்பதை மறந்து, போலிப் பெருமிதத்தாலும் தீவிர வலதுசாரி அரசியலாலும் அர்ஜென்டினா ஒரு மோசமான நாடாக மாறி வருவது உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications