கிண்டலடித்த ரசிகரை தனியாக கூப்பிட்டு 2 அப்பு அப்பிய யூசுப் பதான்!
வதோதரா: ஆபாசமான முறையில் பேசி கிண்டலடித்த ரசிகரை பளார் என அறை விட்டார் கிரிக்கெட் வீரர் யூசப் பதான்.
வதோதாரவில் நடந்த பரோடா, ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சிப் போட்டியின்போது ஒரு ரசிகர் இவ்வாறு நடந்து கொண்டதால் கோபமடைந்த யூசுப் பதான் அந்த ரசிகரை அடித்து விட்டா்ர்.
இதுகுறித்து பரோடா கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்னேஹல் பரீக் கூறுகையில், பதான் பீல்டிங் செய்தபோது ஒரு ரசிகர் அவரைப் பார்த்து ஆபாசமாகப் பேசி திட்டி கிண்டல் செய்தார். அவரது செயல் அநாகரீகமாக இருந்தது.

அடிக்கடி பதானையும், மற்ற வீரர்களையும் பார்த்து அடிக்கடி திட்டி வந்தார். கிண்டலடித்தபடி இருந்தார். அம்பட்டி ராயுடுவையும் அவர் விமர்சித்தார்.
அதை பதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவரை கன்னத்தில் அடித்து விட்டார். ஆனால் அனைவர் முன்பும் பதான் அடிக்கவில்லை.தனியாக டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்து இரண்டு அடி அடித்தார்.
தகவல் அறிந்து யூசுப் பதானின் சகோதர் இர்பான் பதான் விரைந்து சென்று யூசுப் பதானை அமைதிப்படுத்தினார்.
இதுகுறித்து பிசிசிஐக்கு விரைவில் அறிக்கை அனுப்பபடும். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பரீக்.












Click it and Unblock the Notifications