For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையின் தேசிய துக்க நாளில் 'சரக்கு பார்ட்டி' வைத்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தூதர் சின்ஹா

இலங்கை தேசிய துக்க நாளில் மதுபான விருந்து நடத்தியதாக இந்திய தூதரகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: சிங்கள இசைமேதை பண்டித அமரேதாவின் மறைவை இலங்கை அரசு தேசிய துக்க நாளாக கடைபிடித்தது. இந்த நாளில் இலங்கைக்கான இந்திய தூதர் சின்ஹா மதுபானங்களுடன் பிரியாவிடை விருந்து அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சிங்கள இசைமேதை அமரேதவவின் இறுதிச் சடங்குகள் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Controversy erupts over Farewell pary by Indian HC in Srilanka

அமரதேவ மறைவுக்கு 1 வாரம் தேசிய துக்க நாள் கடைபிடிக்கப்படும் எனவும் இலங்கை அரசு அறிவித்திருந்தது. அமரதேவவின் இறுதிச் சடங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமையன்று இரவு இந்திய தூதர் பொறுப்பில் இருந்து விடைபெறும் சின்ஹா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தில் மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மதுபானங்கள் தாரளமாக பரிமாறப்பட்டுள்ளன. மதுபாட்டில்களுக்கு அருகே இந்திய தூதர் சின்ஹா, இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாரச்சி நிற்கும் புகைப்படங்களும் இலங்கை ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளன.

English summary
New Controversy erupted over the farewell party organized by the Indian High Comission for Srilanka on Friday. Srilanka President Maithripala Sirisena greeted the outgoing Indian High Comissioner Y.K Sinha at the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X