இசைப்பிரியா காட்சிகள் போலியாம்...காமன்வெல்த்தை சீர்குலைக்க முயற்சியாம்.. அலறுகிறது இலங்கை
கொழும்பு: இசைப்பிரியா கொலை தொடர்பாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது, அதன்மூலம் காமன்வெல்த் மாநாட்டை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது எனத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.
விடுதலைப் புலிகள இயக்கத்தைச் சேர்ந்தவர் இசைப்பிரியா. இவர் அங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இசைப்பிரியாகொல்லப்பட்டதாக இலங்கை அரசு இதுவரை கூறி வந்தது.
அது சம்பந்தமாக ஊடகங்களில் சில புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் இசைப்பிரியாவை ராணுவ வீரர்கள் பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ பதிவை சேனல்-4 சில தினங்களுக்கு முன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அக்காட்சிகள் போலியாக சித்தரிக்கப் பட்டவை என மறுப்புத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு.

காமன்வெல்த் மாநாடு...
இலங்கையில் இம்மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே, உலக நாடுகள் பல அம்மாநாட்டில் தங்கள் நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா பங்கேற்கும்...
இந்தியாவிலும் கூட அதற்கான கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளது. ஆனால், பிரதமர் அம்மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

வற்புறுத்தல்...
இந்நிலையில், இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தற்போது புதிய ஆதாரம் கிடைத்திருப்பதால், அந்நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது எனத் தலைவர்கள் வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

போர்க்குற்றவாளி...
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதன் மூலம், ராஜபக்சே அதன் தலைவராகி விடுவார். அதன் மூலம் போர்க்குற்றங்களில் இருந்து அவர் எளிதாக தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சேனல்-4....
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சேனல்-4 ஒரு புதிய வீடியோவை வெளியிட்டது. அதில், இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கைகளை பின்புறம் கட்டி இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

செல்போன் காட்சிகள்...
அந்தக் காட்சிகள் அடையாளம் தெரியாத யாரோ ஓர் ராணுவ வீரரால் மறைமுகமாக எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பிரியா இறுதிக் கட்டப்போரில் கொல்லப் படவில்லை என எடுத்துரைத்தது அந்தக் காட்சிகள்.

போலியானவை...
ஆனால் சேனல்-4 வெளியிட்ட அந்தக் காட்சிகள் போலியானவை எனத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு. இது குறித்து அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூர்யா தெரிவித்துள்ளதாவது, ‘ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வுகள் மற்றும் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள முக்கியமான இந்த சமயத்தில், இலங்கையை இழிவுபடுத்தும் வகையில் சேனல்-4 வெளியிட்ட இந்த வீடியோ பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை.

மறுப்பு...
இந்த வீடியோவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முழுவரும் செயற்கையாக உருவாக்கப்பட்டுளள்து. சரண் அடைந்த அல்லது பிடிபட்ட புலிகளை ஒருவரும் ராணுவத்தால் கொல்லப்படவில்லை' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications