நிழல் அரசாங்கம்? மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை!
இலங்கை: ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சே ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இரண்டு பிரதமர்கள், இரண்டு தலைமை நீதிபதிகள் என்கிற அலங்கோலமும் நடந்தேறியது.

தற்போது ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே தரப்பின் கை ஓங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாயவை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவைக்க அரசு தரப்பு மீது அதிருப்தியை ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோருடன் ராஜபக்சே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிக்கையாகவும் தாக்கல் செய்யவும் ராஜபக்சே 'மாஜி'க்களுக்கு உத்தரவும் பிறப்பித்திருக்கிறாராம்!
அடுத்த ஆட்டம் ஆரம்பம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications