இலங்கை அமைச்சரவையில் 4 ''ரா'' உளவாளிகள்.. திடுக்கிடும் தகவல்.. லிஸ்ட் வெளியாகிறது?
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த கேள்வி புதிது கிடையாது.
இதற்கு முன்பே இரண்டு இலங்கை அதிபர்களை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக குற்றச்சாட்டுகள் வந்தது. இந்த நிலையில் இந்த கொலை திட்டத்தை ரா எப்படி எல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்தது என்று சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
[அட அதிபருக்கே இப்படியா?.. டிரம்பின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது?!.. சீனா வைத்த குறி!]

என்ன குற்றச்சாட்டு
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மறுப்பு தெரிவித்தார்
ஆனால் கடைசியில் இலங்கை அரசு இந்த தகவலை மறுத்தது. இந்தியா அப்படி எதுவும் திட்டமிடுவதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியது. பிரதமர் அலுவலகம் இந்த மறுப்பு கடிதத்தை வெளியிட்டது. ஆனாலும் அதன்பின் வரிசையாக இந்த ரா அமைப்பின் கொலை திட்டம் குறித்த தகவல்கள் வெளியானது.

4 பேர் இருக்கிறார்கள்
இந்த நிலையில்தான் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் ரா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேர்தான் இந்தியாவிற்கு மைத்ரிபால சிறிசேனா பற்றிய தகவல்களை அனுப்புவது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கூறியதே மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் அமரவீராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிடுவார்களா?
அமைச்சர் அமரவீரா, மைத்ரிபால சிறிசேனா அமைச்சரவையில் நான்கு ரா உளவாளிகள் உள்ளனர். அவர்கள் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் ராஜபக்சேவின் மகன் நமல், ''அந்த நான்கு பேரின் விவரங்களை வெளியிடுங்கள், இல்லை பதவி விலகுங்கள்'' என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications