'திருமதி இலங்கை'.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்
கொழும்பு: 'திருமதி இலங்கை' பட்டம் வென்றவரிடம் இருந்து ஒருசில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடியிருக்கிறார் புஷ்பிகா டி சில்வா என்ற பெண்.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி நடந்தது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த முறை உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, திருமதி இலங்கை கிரீடத்தை பெற புஷ்பிகா டி. சில்வா, தகுதியற்றவர் என அதே மேடையில் பகிரங்கமாக அறிவித்தார். அவர் விவகாரத்தானவர் என்று கூறி படத்தை பெற தகுதியற்றவர் என்றார்.

மிஸ் இலங்கை
அத்துடன் புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தையும் பறித்தார் கரோலின் ஜுரி. கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே இரண்டாவது வெற்றியாளருக்கு கரோலின் ஜுரி.அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பேசுப் பொருளாக மாறியது. கிரீடத்தை பறிக்கும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலானது.

விவாகரத்து ஆகவில்லை
போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க கூடாது என்பது விதியாகும். இதன்படி தான் புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை பறித்தார். இந்த நிலையில், விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே திருமதி இலங்கை பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.

உலக அழகிக்கு கண்டனம்
இதனிடையே புஷ்பிகா டி சில்வா விவாகரத்து செய்யவில்லை என்று அமைப்பாளர்கள் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டனர். 2020ம் ஆண்டின் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மேடையில் திடீரென ஏன் எப்படி நடந்துகொண்டார் என்பது நடுவர்களுக்கே புரியவில்லை. திகைத்து போயினர். நடுவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கரோலின் ஜுரிக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அர்பணிக்கிறேன்
இது பெரிய அவமானம் என்று கூறி திருமதி உலக அமைப்பு இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்கி உள்ளது. இதனிடையே புஷ்பிகா தனது பட்டத்தை தங்கள் குழந்தைகளை தனியாக வளர்க்க துன்பப்படுகிற ஒற்றை தாய்மார்களுக்கு அர்ப்பணித்தார். இலங்கையில் இன்று என்னைப் போன்ற ஒற்றை அம்மாக்கள் நிறைய உள்ளனர். இந்த கிரீடத்தை அந்த பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்












Click it and Unblock the Notifications