ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி இலங்கையில் 1008 தேங்காய் உடைப்பு
யாழ்ப்பாணம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி யாழ்பாணத்தில் 1000 தேங்காய் உடைத்து இலங்கை தமிழர்கள் வழிபாடு நடத்தினர்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இன்னும் தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரிக்கு ஆதரவாக அதிபர் ஓபாமா வாக்கு சேகரித்து வருகிறார். இவர்களில் ஹிலாரிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசிதிபெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கை தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் 108 மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து பிரார்த்தனை நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications