தமிழக மீனவர்கள் 42 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்கள் 42 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றது.
அதேபோல், பிப்ரவரி 2-ந்தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து கொண்டு சென்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
3 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், இன்று 4-வது முறையாக இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 42 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது. விடுதலையான 42 பேரும் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications