78 'இந்திய' மீனவர்களை விடுதலை செய்ய மகிந்த ராஜபக்சே உத்தரவு!
கொழும்பு: இலங்கையால் கைது செய்யப்பட்ட 78 இந்திய மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர்கள் 82 பேரை நேற்று இலங்கை அரசு கைது செய்தது.

இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சென்னை சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்தது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ளதாவது:
13 இலங்கை மீனவர்களை இந்தியா இன்று விடுதலை செய்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 78 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
அதே போல் எஞ்சிய இலங்கை மீனவர்கள் அனைவரையும் இந்தியாவும் விரைவில் விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications