5 தமிழக மீனவர்களின் தூக்கு ரத்து- ராஜபக்சே உத்தரவிட்டதாக இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் தகவல்
கொழும்பு: இலங்கை நீதிமன்றத்தால் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசோ, 5 மீனவர்களும் அப்பாவிகள்தான்.. அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.
பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் அங்குள்ள இந்திய தூதரகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தமக்குள்ள அதிகாரத்தின்படி 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டு ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உரிய உத்தரவை நீதித்துறைக்கு ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இருப்பினும் இந்தியத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றால்தான் இது நடைமுறைக்கு வரும்.
இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications