ஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்!
கிளிநொச்சி: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடைபெறும் விபத்துகளில் 8 ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா உள்ளிட்ட இடங்களில் கடந்த 25-ந் தேதி முதல் அடுத்தடுத்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துகளில் பெரும்பாலும் ராணுவ வீரர்களே பலியாகி உள்ளனர்.

அம்பாறை, வவுனியாவில் நடைபெற்ற விபத்துகளில் 2 ராணுவத்தினர் உயிரிழந்தனர். கிளிநொச்சி விபத்தில் 6 ராணுவத்தினர் பலியாகினர்.
மேலும் ராணுவ மேஜர் உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவத்தினரே அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி பலியாவதும் படுகாயமடைவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த விபத்துகள் குறித்து ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications