முல்லை தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்த இலங்கை மீனவர்கள்!
கொழும்பு: முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை மீனவர்கள் சிறை பிடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 8 பேர் இலங்கை மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். முல்லைத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ரங்கநாதன் (வயது 29), ஆனந்தவேலு (50), லட்சுமணன் (40), வினோத் (28), பாலமுருகன் (35), சித்திரவேலு (28), சாமிநாதன் (25), கண்ணன் (27) என தெரியவந்துள்ளது.
அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர்கள் கடந்த 2ம் தேதி கடலுக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மீனவர்களை இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து வந்த நிலையில், இப்போது அந்த நாட்டு மீனவர்களும் மடக்கிப்பிடித்து ராணுவத்தினரிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications