இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம்.. ஐ.நா.வுக்கு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை
கொழும்பு: இலங்கை போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு 3 இலங்கை தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சர்வதேச யுத்தக்குற்றங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டமையை மீண்டும் ஒருமுறை சர்வதேச சமூகத்துக்கு நினைவுறுத்த விரும்புகின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை குற்றம் என்பவற்றை விசாரிப்பதுக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றினை கண்டறிவதற்கான கருத்தாடல்கள் மற்றும் அதற்கான நியாயாதிக்கங்கள் குறித்து விவாதிப்பதில் கடந்த ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன.
ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை மீதான, ஐ.நா அலுவலகத்தின் விசாரணை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளது.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசக் குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக விவாதங்களும் பேச்சுவாத்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை பொறிமுறையோ அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக விசாரணை பொறிமுறையோ நீதியை வழங்காது என்பதனை நாம் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications