ஈழத் தமிழருக்கு அதிகாரம் வழங்கும் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நிறைவேற்றுவோம்: ரணில் உறுதி
கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 13வது அரசியல் சாசனத் திருத்தமானது ஒற்றையாட்சிக்குட்பட்ட வகையில் நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி - இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். இதன்படி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை ஒரே மாகாணமாக இணைப்பது, இம்மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது ஆகியவற்றுக்காக இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது சரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதான் 13வது அரசியல் சாசன திருத்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது வரை 13வது அரசியல் சாசனத் திருத்தம் மூலமே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேன அதிபரான பின்னர் இலங்கை நாடாளுமன்றம் நேற்று முதல்முறையாக கூடியது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது:
இன்று இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கும் ஒழுக்கமான ஒரு அரசை உருவாக்கவும் வழி ஏற்பட்டுடுள்ளது.
100 நாட்களில் புதிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஒரு அடித்தளத்தை தொடங்க அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டின் இரு பிரதான கட்சிகள் மட்டுமல்ல ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரே நோக்கத்திற்காக ஒரு பொதுவான பயணத்துக்கு புறப்படுவதும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்துதான். இன்று நமது நாடு மிகவும் பலமிழந்த நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக பலத்த நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கி இருக்கிறோம். தேசிய, சர்வதேச நிலையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.
அதிபருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குப் பதிலாக அமைச்சரவையின் மூலமாக நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் தரக்கூடிய புதிய அரசு முறையை உருவாக்குவோம்.
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்கும். தமிழருக்கு அதிகாரம் வழங்கும் 13வது திருத்தச் சட்டமும் ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்கும். இந்த 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை நாடாளுமன்றத்தின் மூலமே காண்போம்
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications