16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது சட்டம்!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மூலம் விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூபாய் 275 கோடி வரை அபராதம் விதிக்க முடியும்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப் போவதாக, அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த சட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்தன.

australia social media children

பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன், இந்தச் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அவர்களும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மீது விவாதம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடைபெற்று நேற்று கீழ் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

இந்த மசோதா இன்று மாலை செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே, இப்போது இந்த மசோதா சட்டமாக மாறுவது உறுதியாகிவிட்டது. 2025 நவம்பர் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் உள்ளிட்ட அரசு தரவுகளைக் கொண்டு வயது சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் தளங்களுக்கு 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 275 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரே அடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுத் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சமூக ஊடகங்களை 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், இதனை நடைமுறைப்படுத்துவது சிக்கலானது என்றும், சிறுவர்கள் வேறு வழிகளில் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+