சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பவுலருக்கே குழப்பம்! சந்தேகத்தில் கேட்ட ரோஹித்.. எடுங்க.. உறுதியாக சொன்ன தினேஷ் கார்த்திக்!ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சிட்னி: தென்னப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று இன்று பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது பேட்டிங் இறங்கிய தென்னப்பிரிக்க அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்றைய போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த பிட்ச் பொதுவாக அதிக பவுன்ஸ் ஆகும்.

சாதாரணமாக வீசினாலே நன்றாக பவுன்ஸ் ஆக கூடிய பிட்ச் ஆகும். இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதே சரியாக இருக்கும்.

"எல்லா நாளும் கோலியே காப்பாற்றுவாரா" கண்ணை மூடி திறப்பதற்குள் காலியான இந்திய பேட்ஸ்மேன்கள்!

 இன்னிங்ஸ்

இன்னிங்ஸ்

பொதுவாக இங்கு முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் 133 ஆக உள்ளது. ஆனாலும் கடந்த 3 போட்டிகளாக இங்கு சேசிங் செய்யும் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. இந்த நிலையில்தான் முதலில் பேட்டிங் செய்வதே சேப் என்பதால் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அணியில் இருந்து அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் திணறியது.

அடுத்தடுத்து அவுட்

அடுத்தடுத்து அவுட்

ராகுல் 9, ரோஹித் 15, கோலி 12 என்று வரிசையாக டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் தீபக் ஹூடா 0, ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். தினேஷ் பார்த்திக் பொறுமையாக ஆடி 15 பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ஆனால் சூர்ய குமார் யாதவ் மட்டும் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். 68 ரன்களை இவர் 40 பந்துகளில் எடுத்தார்.

சூர்யா குமார்

சூர்யா குமார்

இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம். இவர் மட்டும் தனியாக வேறு பிட்சில் ஆடுவது போல ஆடினார். எல்லோரும் இந்த பிட்சில் திணறிய போது சூர்யா குமார் யாதவ் மட்டும் இந்த பிட்சில் ஈசியாக ஆடினார். அதிலும் பவுன்சரி பந்துகளை எளிதாக எதிர்கொண்டார். இதனால் இந்திய அணி 133-9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம் என்பதால் இந்திய அணி நம்பிக்கையாக களமிறங்கியது.

அர்ஷ்தீப்

அர்ஷ்தீப்

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. டி காக் 1 ரன் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ரைலி ரோசோவும் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். இவர் காலில் பால் பட்டதும் பவுலர் அர்ஷ்தீப் விக்கெட் கேட்கவில்லை. பந்து அவுட் சைட் லெக்கில் போவதாக கூறினார்.

 ரைலி

ரைலி

இதற்கு கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ரிவ்யூ கேட்கலாமா என்று கேட்ட போதும் அர்ஷ்தீப் உறுதியாக சொல்லவில்லை. பந்து வெளியே செல்கிறது என்று சிக்னல் காட்டினார். ஆனால் தினேஷ் கார்த்திக் மட்டும் ரோஹித் சர்மாவிடம் எடுங்கள் என்று உறுதியாக கூறினார். அவர் சொன்னதை நம்பி ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்டார். இதன் மூலம் ரைலி அவுட் ஆனது ரிவ்யூவில் உறுதி செய்யப்பட்டது.

English summary
How does Dinesh Karthik DRS helped to take a wicket for India against South Africa?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X