தமிழகம், ஆந்திராவில் ஜனவரியில் மட்டும் கரை ஒதுங்கிய ஆமைகள்... 1122!
சென்னை: கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் 1122 பெரிய சைஸ் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மெரீனா கடற்கரை, திருவொற்றியூர், நீலாங்கரை மற்றும் மரக்காணம் கடலோரத்தில் இவை கரை ஒதுங்கின.
இந்த ஆமைகள் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் ஆகும். கடல் ஆமைகள் செத்து கரை ஒதுங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறதாம்.

மெரீனாவில் 145 ஆமைகள்
மெரீனா கடற்கரை, நீலாங்கரை இடையிலான பகுதியில் மட்டும் 145 ஆமைகள் இறந்து ஒதுங்கின.

நீலாங்கரை - மரக்காணத்தில்
நீலாங்கரை- மரக்காணம் இடையிலான பகுதியில் மட்டும் 226 ஆமைகள் இறந்து ஒதுங்கின.

ஆந்திராவில் 547ஆமைகள்
ஆந்திர கடலோரத்தில் 547 கடல் ஆமைகள் இறந்து ஒதுங்கின. இவை அனைத்தும் நெல்லூர் பகுதியில் கரை ஒதுங்கின.

மீன்பிடி வலைகளே காரணம்
மீன் பிடி வலைகள்தான் ஆமைகள் இறப்புக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கடல் சுற்றுச்சூழலியல் நிபுணர்கள். வழக்கமாக ஆமைகள், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அதிக அளவில் வருகின்றன. இந்த காலகட்டத்தில் பெண் ஆமைகள் குஞ்சு பொறித்து முட்டையிடும். ஒரே நேரத்தில் 60 முதல் 120 முட்டைகள் வரை அவை பொறிக்கும். ஒரு பெண் ஆமையானது ஒரு சீசனில் 2 அல்லது 3 முறை முட்டையிடுமாம். முட்டையிடுவதற்காக அவை கடற்கரைக்கு வரும்போது மீன்பிடி வலைகளில் சிக்கி இறக்கின்றனவாம்.

ஜனவரி மாதம் முழுவதும் இறப்புகள்தான்
ஜனவரி மாதத்தில் தினசரி சில ஆமைகள் இறந்து போய் கரை ஒதுங்கிக் கொண்டிருந்தனவாம்.

பிப்ரவரியில் திருவொற்றியூரில்
பிப்ரவரி 1ம் தேதி கூட திருவொற்றியூர், துணை சார்பதிவாளர் அலுவலகம் அருகே ஒரு பெரிய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications