ஜோராய் தொடங்கியது நெல்லை ”புத்தக திருவிழா”- 143 அரங்குகளில் புத்தக விற்பனை
நெல்லை: நெல்லையில் 10 நாள் புத்தக திருவிழா தொடங்கியது. 150 அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த புத்தக கண்காட்சி வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாளை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஆண்டு 102 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் ரூபாய் 1.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின. நெல்லையில் புத்தக கண்காட்சிக்கு இருந்த வரவேற்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் கண்காட்சி நடந்த தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி பாளை வஉசி மைதானத்தில் தொடங்கியது.
மைதானத்தில் இந்தாண்டு 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 143 பதிப்பகத்தார் புத்தக கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். அனைத்து அரங்குகளுக்கும் தேவையான புத்தகங்கள் லாரியில் வந்து இறங்கின.
ஒவ்வொரு அரங்கிலும் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புத்தக கண்காட்சிக்கான பணிகளை கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏற்பாடுகள் குறித்து புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், வணிக வரித்துறை இணை ஆணையருமான தேவேந்திர பூபதி கூறுகையில், இந்தாண்டு கண்காட்சியில் மொத்தம் 143 அரங்குகள் புத்தக விற்பனைக்காகவும், 7 அரங்குகள் அரசு அரங்குகளாகவும் இடம் பெற்றுள்ளன.
தாமிரபரணி பாதுகாப்பு, தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மைய நிகழ்வுகள், வரவேற்பு அரங்கம், வங்கி சேவை என 7 அரங்குகளை அரசு பயன்படுத்தி கொள்ளும். இக்கண்காட்சிக்கு ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு புத்தக விற்பனைக்கு ரூபாய் 3 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications