நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இந்திய கடல் எல்லையில் ஆதாம் பாலம் என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்த்து பலியானார். இதனால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications