மீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள் திரள்கிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நெடுவாசல் கிராமத்தில் கூடி போராட முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை முதல் போராட முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாறவுள்ளது.
இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
22 நாள்கள் இதுதொடர்பாக போராடிய மக்களிடம் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்பந்தம்
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ஆம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த 32 வகையான அனுமதிகளை அந்த நிறுவனங்கள் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அனுமதிக்க மாட்டோம்
இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெறவைத்துவிட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினரோ, மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தங்கள் உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட அள்ள விடமாட்டோம் என்றனர்.

தமிழகம் வஞ்சிப்பு
இந்நிலையில் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று போராடியும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

நாளை போராட்டம்?
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக் கோரி நாளை 6-ஆம் தேதி 100 கிராமத்தினர் போராட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாற உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications