நெல்லையில் தொற்று நோய்களை தடுக்க 101 நடமாடும் மருத்துவ குழுக்கள் துவக்கம்
நெல்லை: நெல்லையில் பல பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளை மேற்கொள்ள 101 நடமாடும் மருத்துவ குழுக்களை சிறப்பு அதிகாரி துவக்கி வைத்தார்.
தமிழக அரசு நல்வாழ்வுத் துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கு மாவட்டம் முழுவதும் 101 நடமாடும்
மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்தாளுனர், உதவியாளர் உள்பட 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அவசர வெள்ள மீட்பு, மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் 1077 மற்றும் 108 என்ற எண்களுக்கு போன் செய்தால் அவர்கள் விரைந்து வந்து நோய் பரவாமல் தடுப்பார்கள். பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் துவக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். வெள்ள நிவாரண பணி சிறப்பு அதிகாரி செந்தில்குமார் நடமாடும் மருத்துவ குழுக்களின் வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அவசர காலங்களில் இந்த வாகனங்களுக்கு போன் செய்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தின் அருகே உள்ள மற்ற வாகனங்களையும் தொடர்பு கொண்டு வரவழைப்பார்கள்.
தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கவும், அவை பரவாமல் இருக்கவும், நோய் பாதித்தவர்களுக்கு தேவையான
மருந்துகள் கொடுக்கவும் இவர்கள் உடனடியாக களம் இறங்குவார்கள். இந்த ஆம்புலன்ஸ் சேவையில் பல பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications