அடிபட்டவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நர்ஸ் படுகாயம்
வாகன விபத்தில் காயமடைந்தோரை மீட்கச் சென்ற 108 ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது. இதில் ஆம்புலன்ஸில் சென்ற நர்ஸ் படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவில்: விபத்தில் அடிபட்டவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் நர்ஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில் அருகேஎ இறச்சிகுளத்தில் இருந்து நாகல்காட்டுக்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கினார். இதுபற்றி 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியவரை மீட்க நாகல்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த ஆம்புலன்ஸ்சை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராமராஜன் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் கடுக்கரை ஆவடி நகரை சேர்ந்த பயிற்சி பெற்ற நர்ஸ் சுதா உடன் சென்றார். ஆம்புலன்ஸ் வரங்காடு- ஈசாந்திமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் ஓரத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராமராஜன், சுதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ராமராஜன், சுதா ஆகிய இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதே சமயம் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த நபர் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் அடிபட்டவரை மீட்கச் சென்ற ஆம்புலன்சே விபத்தில் சிக்கி இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications