ஜெ. இறந்தது எத்தனை மணிக்கு? அப்பல்லோ பொய்யை அம்பலப்படுத்திய ஓபிஎஸ்
பன்னீர்செல்வம் கூறுவதை பார்த்தால், ஊடகங்களுக்கு கிடைத்த தகவலை போலவே பன்னீர்செல்வத்திற்கும் ஜெயலலிதா மாலையிலேயே மறைந்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நேரம், டிசம்பர் 5ம் தேதி, மாலை 4.30 மணியா அல்லது இரவு 11.30 மணியா என்ற சந்தேகத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு எழுப்பியுள்ளது.
சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நிறைவாக பேசுகையில் இந்த குண்டை தூக்கி போட்டார். ஜெயலலிதா மரணமடைந்ததாக, 2016, டிசம்பர் 5ம்தேதி, மாலை 6.30 மணிக்கு தனக்கு தெரிவிக்கப்பட்டதாக பேச்சின்போது அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா மாலை 4.30 மணியளவில் மறைந்துவிட்டதாகவும், தனக்கு தகவல் 2 மணி நேரம் தாமதமாகதான் கொடுக்கப்பட்டதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எனவே, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்படும் முன்பாக தன்னிடம் அதுகுறித்து தெரிவித்து அனுமதி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இரு தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து அனுமதி பெறப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் அதை மறுக்கும் பன்னீர்செல்வம், அந்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
டிசம்பர் 5ம் தேதி மாலையிலேயே, ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக டிவி சேனல்கள் உட்பட பல ஊடகங்களும் செய்தியை பிரேக் செய்தன. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை உடனடியாக அதை மறுத்தது. இரவு 11.30 மணிக்குத்தான் அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதா இறந்ததாக கூறி, நள்ளிரவில், அதுகுறித்த விவரத்தை வெளியிட்டது.
பன்னீர்செல்வம் கூறுவதை பார்த்தால், ஊடகங்களுக்கு கிடைத்த தகவலை போலவே பன்னீர்செல்வத்திற்கும் ஜெயலலிதா மாலையிலேயே மறைந்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதில் எது உண்மை என்பதே இப்போது கேள்விக்குறி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications