வேலூரில் கனமழைக்கு 11 பேர் பலி: சிறப்பு அதிகாரி பேட்டி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாக சீரமைப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரி சபீதா தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின.

இந்நிலையில் வேலூர் மாநகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிறுப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி சபீதா கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு வேலூர் மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் காரணமாக 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 188 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது. 773 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 208 ஏக்கர் வேர்க்கடலை சேதமடைந்துள்ளது என்று சிறப்பு அதிகாரி சபீதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications