வட மாநிலம் செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்திருக்கிறீர்களா? 12 ரயில்கள் ரத்து பட்டியலை இங்கு பாருங்க!
சென்னை: மத்திய பிரதேசத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து பட்டியல் இதோ...

பெங்களூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாட்னா புறப்பட்டு, சென்னை சென்டிரலுக்கு பிற்பகல் 3.40 மணிக்கு வர வேண்டிய சங்கமித்ரா ‘எக்ஸ்பிரஸ்' ரெயில்(வ.எண்:12295), ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பாட்னாவில் இருந்து பெங்களூருக்கு இன்று இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு, வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 1.55 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய சங்கமித்ரா ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (12296) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து புது டெல்லிக்கு இன்று இரவு 7.15 மணிக்கு புறப்படும் கிராண்ட் டிரங்க் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:12615) ரத்து செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இரவு 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிராண்ட் டிரங்க் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (12616) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து சப்ராவுக்கு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய வாரம் இருமுறை இயக்கப்படும் கங்கா காவேரி ‘எக்ஸ்பிரஸ்'(12669) ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்முதாவியில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வருகிற 23-ந் தேதி காலை 10.10 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய வாரம் மூன்று முறை இயக்கப்படும் ஜம்முதாவி ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(16032), ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து லக்னோவிற்கு இன்று காலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16093) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரலுக்கு இரவு 11.25 மணிக்கு வந்து பின்னர் அங்கிருந்து இந்தூர் ஜங்சன் செல்லக்கூடிய அகில்யானகிரி ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:22646), ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2.10 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக ஜம்முதாவி செல்லும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:16317) ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், நெல்லையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, காட்பாடி வழியாக ஜம்முதாவி செல்லும் வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16787), ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு 21-ந் தேதி காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய வாரம் இரு முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(12968) ரத்து செய்யப்பட்டன.
ஜம்முதாவியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு 22-ந் தேதி காலை 10.10 மணிக்கு வரவேண்டிய வாரம் மூன்று முறை இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (16032), ரத்து செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு இரவு 11.25 மணிக்கு வந்து சேர வேண்டிய கோரக்பூர் ரப்திசாகர் ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும் (வ.எண்:12512), ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து ஜெய்ப்பூருக்கு வருகிற 21-ந் தேதி மாலை 5.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய ‘எக்ஸ்பிரஸ்' ரெயிலும்(12967), ரத்து செய்யப்படுகிறது.
எனவே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களில் முன் பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications