வனப்பகுதியில் அனுமதியில்லாமல் மூலிகை பறித்த 12 பேர்.. ஆளுக்கு ரூ. 1000 அபராதம்
தருமபுரி: மொரப்பூர் வனப்பகுதியில் அபூர்வமான மூலிகைகளைப் பறித்த 12 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது வனத்துறை.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் வனச் சரகத்துக்கு உள்பட்ட எச்.அக்ரஹாரம் வனப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

மேலும், அவர்கள் அந்தப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட காப்புக்காட்டுக்குள் முகாமிட்டு சமையல் செய்வதை கிராம மக்கள் சிலர் பார்த்ததாகவும் போலீஸாருக்கு அண்மையில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன், அரூர் உதவிக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து எச்.அக்ரஹாரம், கீழ்மொரப்பூர், சோலைக்கொட்டாய் பகுதியிலுள்ள வனப் பகுதிகளில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒபிகாவலசு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் அவரது மனைவி மலர், கணேசன் அவரது மனைவி பாக்கியம், ராமசாமி, ஆறுமுகம், தேவராஜ், சேட்டு, செல்வம், ஆண்டி, மயில், குள்ளம்மாள் ஆகியோர் வனப் பகுதியில் தங்கியிருந்தனர்.
போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வனப் பகுதியில் தங்கி மூலிகை செடிகள், கிழங்குகள் பறித்து கொண்டுபோய் வெளியூர்களில் விற்பனை செய்பவர்கள் என்பதும், வழக்கமாக காட்டுப்பகுதிக்கு வரும் இவர்கள் ஒரு வாரம் வரை தங்கியிருப்பார்கள் என்பது தெரிந்தது.
இதையடுத்து, வனப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து மூலிகைகள் பறித்த குற்றத்துக்காக 12 பேருக்கும் தலா ரூபாய் 1,000 வீதம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அபராதம் செலுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications