ஒண்டி வீரன் நினைவு நாள்.. பூலித்தேவன் பிறந்த நாள்.. நெல்லையில் 144 தடை உத்தரவு
நெல்லை: ஒண்டிவீரன் நினைவு நாள், பூலித்தேவன் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர்) 2-ந் தேதி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகாவில் உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் நாளை (20-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி பூலித்தேவனின் பிறந்த நாள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் மக்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஆண்டுதோறும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடவும் இன்று (ஆகஸ்ட் 19) முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் 12 -ஆம் தேதி காலை 5 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாலங்குளத்தில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள்,சுருள் கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டுச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.

நெற்கட்டும் செவல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அந்த வழியாக வாடிக்கையாக நின்று செல்லும் வாகனங்கள், வெளி இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவை இயங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதர வாகனங்களாகிய டூரிஸ்ட் மோட்டார், கேப்ஸ், டூரிஸ்ட் மேக்சி கேப்ஸ், அகில இந்திய டூரிஸ்ட் மோட்டார் கேப்ஸ், தொண்டர்களை ஏற்றிவரும் சுற்றுலா வாகனங்கள், தற்காலிக அல்லது சிறப்பு அனுமதி பெற்ற வாடிக்கை வாகனங்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி சிவகிரி, சங்கரன்கோவில், நடுவக்குறிச்சி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, நெல்லை மாநகர பகுதியிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் நெல்லை சரக டி.ஐ.ஜி.தினகரன் தலைமையில் 5 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து போலீசார் நெல்லை வந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், குருவிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளை நாளை ஒருநாள் மூடவும் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications