சென்னை ஐடி நிறுவனத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து.. ஊழியர்கள் காயம்
Recommended Video

சென்னை: ஐடி நிறுவனத்தில் 2 கிரேன்கள் விழுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ளது zoho என்ற ஐடி நிறுவனம். இது 500 அடி உயரத்தில், 12 மாடி கட்டிடத்துடன் பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இப்போது, 13வது தளம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான பணியில் 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதில் நிறுத்தப்பட்ட ஒரு கிரேன் இன்று மதியம், திடீரென சரிந்து விழுந்தது. அதை தூக்க மற்றொரு கிரேன் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராமல் அதுவும் விழுந்தது.

வேன் மீது விழுந்தது
ஒரு கிரேன் அங்கு நின்ற ஒரு வேன் மீது விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஐடி ஊழியர்கள் 3 பேர் காயமடைந்தனர். மற்றொரு கிரேன், நிறுவனத்தின் 7வது மாடி கட்டிடதின் பக்கவாட்டில் விழுந்தது.

வெளியே வந்து பார்த்தனர்
இதனால் அந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய ஐடி ஊழியர்கள் பலரும் அச்சத்தினால் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளனர். ஆனால் இதன்பிறகு நிலைமை சீரடைந்தது.

போலீசார் குவிப்பு
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அதேநேரம், பத்திரிகையாளர்களை கட்டிட எல்லைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிருஷ்டவசமாக தப்பினர்
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். இதனால் கூடுவாஞ்சேரி பகுதியில் ஐடி ஊழியர்கள் நடுவே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications