"யாராவது காப்பாத்த மாட்டாங்களா?" குற்றால அருவியில் மிதந்தபடியே அடித்து செல்லப்பட்ட சிறுவன்- வீடியோ
தென்காசி: தென்காசியில் குற்றாலம் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் புதிய குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 5 கி.மீ. தூரம் பயணம் செய்து பழைய குற்றால அருவிகளுக்கு மக்கள் வந்தனர். அங்கு ஆர்ப்பரிக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து படிக்கட்டுகளைத்தாண்டி ஓடி வந்தது. தண்ணீர் அதிகரித்ததும் அங்கிருந்த அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இதில் தண்ணீர் விழுந்த ஃபோர்ஸில் அங்கு குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அந்த சிறுவனை தேடும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் நீரின் வரத்து குறைந்ததை அடுத்து அரை கி.மீ. தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
இந்த நிலையில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிறுவன் வெள்ளத்தில் படுத்தபடியே மிதந்து வருகிறார். ஆனால் தண்ணீரின் வரத்து அதிகபடியாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. வீடியோவில் அந்த சிறுவன் உருண்டு பிரண்டபடி வருவதை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது.
அந்த சிறுவனுக்கும் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணம் வந்திருக்குமே! பழைய குற்றாலத்தில் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகளே உஷாராகி குளிக்காமல் வந்துவிடுவார்களாம். காரணம். மலையில் இருந்து நேரடியாகவே இந்த பழைய குற்றாலத்திற்கு தண்ணீர் வருகிறது.
இதனால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிப்பது பயணிகளுக்கு தெரியாது. ஒரு வேளை குற்றாலத்தில் மழை பெய்தால் நிச்சயம் மலைகளில் அதிக அளவுக்கு மழை இருக்கும் என தெரிந்து கொண்டு குளிப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் நேற்று யாருடைய நேரமோ, குற்றாலத்தில் மழையே பெய்யலையாம். மலையில் மட்டும் மழை பெய்து இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்தால் அடித்த ஃபோர்ஸில் நேராக பள்ளத்திற்குத்தான் செல்வார்கள். சிலர் நேற்றைய தினம் கம்பியை பிடித்துக் கொண்டும் தப்பியுள்ளனர். ஆனால் கம்பியை விட்டால் நேரடியாக பள்ளத்திற்குத்தான். அதில் உள்ள பாறைகளில் அடிப்பட்டு நேராக தண்ணீரில் விழும் நிலை ஏற்படும்.
இந்த சம்பவத்தை அடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தென்காசி மாவட்டத்திற்கு மே21 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவிகளான பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அருவிகள், அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications