18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அனைத்து வாதங்களும் நிறைவு.. விரைவில் தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று இறுதி வாதம்- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3 வது நீதிபதி சத்தியநாராயணன்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. சபாநாயகர் தரப்பு வாதம் இன்று நடந்தது.

    18 MLA Disqualification: Final hearing of case today in Madras High Court

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதலில் வந்த தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வேறு வேறு தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் சென்றது.

    தற்போது அவர் வழக்கை விசாரித்து வருகிறார். இதில்தான் வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.

    தற்போது சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் வாதிட்டார். அவர் இன்று தன்னுடைய வாதத்தை நிறைவு செய்தார். இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் எல்லாம் முடிவடைந்து இருக்கிறது.

    இன்றுடன் அனைத்து வாதங்களும் முடிவடைந்துள்ளது. இதனால் விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் 3 வது நீதிபதி சத்தியநாராயணன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+