தப்பியது தமிழக அரசு.. இன்னும் ''சில'' மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்பு வந்து இருப்பதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை தமிழக அரசுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்பு வந்து இருப்பதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை தமிழக அரசுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.
மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.
அரசை ஆட்டிப்படைக்க போகும் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒன்றுக்கு பதில் இரண்டு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது.

மூன்றாவது நீதிபதி
தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒரு வருடமாக ஆட்சி
இந்த நிலையில் திடீர் என்று ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி வழக்கு நடக்கும் போதே, ஒரு வருட ஆட்சியை முடித்துள்ளார். சரியாக தீர்ப்பு மட்டுமே 5 மாதம் கழித்துதான் அளிக்கப்பட்டது. நீதிபதி இந்திரா பானர்ஜி 2 நிமிடமும், நீதிபதி சுந்தர் 3 நிமிடமும் வாசித்த இந்த தீர்ப்பிற்காகதான் தமிழகம் 5 மாதம் காத்திருந்தது.

தேர்தல் இல்லை
இந்த தீர்ப்பில் மிக முக்கியமாக, மூன்றாவது நீதிபதி தீர்ப்பளிக்கும் வரை, தேர்தலை நடத்த கூடாது என்று கூறியுள்ளனர். அதனால், மூன்றாவது நீதிபதியின் கருத்து இதில் முக்கியமாகிறது. இந்த தகுதி நீக்கம் செல்லுமா, செல்லாதா என்று அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை வழக்கு மீண்டும் காத்திருக்கும்.

எத்தனை மாதம்
அதேபோல், இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி யார் என்று இன்னும் கூறப்படவில்லை. இதனால் அவரை நியமிக்க இன்னும் இரண்டு வார காலமாவது ஆகும். அதன்பின் அவர் வழக்கின் வாதங்களை பார்வையிட்டு தீர்ப்பை வழங்க இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம். இதனால் இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications