சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. இருவர் பலி, இருவர் படுகாயம்
சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சென்னை வில்லிவாக்கம் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் வடபழனியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் மேலாளராக உள்ளார்.

இவரது மனைவி அனுசியா மற்றும் அவரது இரு மகள்கள் தனுஸ்ரீ,சஞ்ஜு ஆகிய மூவருடன் பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு நான்கு பேரும் பாடி வழியாக சென்றுள்ளனர்.
பாடி மேம்பாலத்தில் ஏறும் போது அவ்வழியாக பின்னால் வந்த கண்டைனர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மகள் தனுஸ்ரீ மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தின் மனைவி அனுசியா மற்றொரு மகள் சஞ்ஜு ஆகிய இருவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications