கடையநல்லூர் அருகே ஆட்டோ மீது வேன் மோதி 2 பேர் பலி
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
கடையநல்லூர் மின்சாரவாரிய அலுவலகம் அருகே நேற்று காலையில் கடையநல்லூர் அருகேயுள்ள கிளங்காட்டிலிருந்து கடையநல்லூர் மார்கெட்டிற்கு ஒரு பயணிகள் ஆட்டோவில் வயக்காட்டுபச்சேரி பகுதியை சார்ந்த சுப்பையா மகன் வீரமணி, முப்பிடாதி மகன் மூக்கையா ஆகிய 2 பேரும் தங்களது நிலங்களில் விளைந்த தக்காளி பழங்களை கூடையில் வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சேலத்திலிருந்து குற்றாலம் சுற்றுலா வந்த வேனும் எதிர்பாராதவிதமாக கொண்டன. இதில் ஆட்டோ ஓட்டுனர் வீரமணி, மூக்கையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலியானார்கள். வேனில் இருந்த சுமார் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அப்பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள் மீட்புபணியில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி..?
ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த சிறுவனை ஆட்டோ டிரைவர் காப்பாற்ற முயற்சித்த போது சாலையின் மேற்குப் பகுதியிலிருந்து ஆட்டோ கிழக்கு பகுதி நோக்கி திரும்பிபோது கடையநல்லூரில் இருந்து குற்றாலம் நோக்கி வந்த சேலம் வேன் மோதி விபத்து ஏறபட்டது. மேலும் வேனின் முன் பகுதியில் விலைஉயர்ந்த மதுப் பாட்டில்கள் பெட்டி நிறைய இருந்துள்ளது. மேலும் வாகனத்தின் முன் பகுதியில் குடித்தும், குடிக்காமலும் அரைகுறையாய் ஒருமதுப் பாட்டிலும் இருந்தது.

எனவே அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications