உரிமைத்தொகை கிடைக்கலயா? போட்டோ எடுக்கணும்.. அதிகாரிகள் போல வந்து நகையை அபேஸ் செய்த 2 பேர்! அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி: ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்காத பெண்களை குறி வைத்து நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன்பெற்று வருகின்றனர். தகுதி இருந்தும் மகளிர் உதவித்தொகை கிடைக்காத பெண்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்தவர்களில் 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 11 லட்சம் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வீடுகளுக்கு ஆய்வு செய்யும் அதிகாரிகள் போல வந்து கொள்ளையடிக்கும் கும்பல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர்பாளையம் பகுதியில் இரண்டு நபர்கள் வீடு வீடாகச் சென்று தங்களை அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களிடம் ஆய்வு நடத்துவதற்காக வந்ததாக கூறி பல வீடுகளில் விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள சரோஜா என்பவர் வீட்டிற்கு அவர்கள் இருவரும் சென்று கலைஞர் உரிமைத் தொகை உங்களுக்கு வருகிறதா எனக் கேட்டுள்ளனர். சரோஜா தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மோசடி நபர்கள், அவரது குடும்ப அட்டையை கொண்டு வரச் சொல்லி அதிகாரிகள் போல் பேச்சு கொடுத்துள்ளனர். மற்றொருவர் பின்னால் வந்து சரோஜாவை போட்டோ எடுக்க உள்ளதாகவும், அதனால் அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்துவிட்டு ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அப்போது அதே இடத்தில் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வீட்டிற்குள் உள்ள ஒரு அறைக்குச் ஆதார் அட்டையை எடுக்கச் சென்றுள்ளார் சரோஜா.
சரோஜா மீண்டும் வருவதற்குள் அந்த இரண்டு நபர்களும் அவர் கழற்றி வைத்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து சரோஜா அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். அந்த 2 நபர்களும் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அதனைக் கொண்டு எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அவர்கள் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் கடலூர் அண்ணாநகர் கேப்பர் மலை சாலையில் உள்ள ஷாஜகான் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், இருசக்கர வாகனம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் நிலையில், அந்த திட்டத்தை வைத்தே கொள்ளை முயற்சியில் கும்பல் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications