வர வர போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை தமிழ்நாட்டில்!
போக்குவரத்து போலீசை 2 பேர் கையை முறுக்கி தாக்கினர்.
Recommended Video

தஞ்சாவூர்: வரவர போலீஸ்காரங்கன்னா ஒரு பயமே இல்லாம போச்சு. பயம் இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்போதெல்லாம் அவர்களை சில ரவுடிகள் அடிக்கவே தொடங்கிவிட்டனர். கடந்த சில தினங்களாகவே இது தமிழகத்தில் நடந்து வருகிறது.
சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபட்டுவிட்டு, பிறகு போலீசாரிடம் மாட்டி கொள்ளும் நேரத்தில் எல்லாம் இதுபோன்ற தாக்குதல்கள் போலீசார் மீது தொடுக்கப்படுகிறது. சிக்கி ஜெயிலுக்குள் போயிடக்கூடாது என்ற பயத்திலும் போதையிலும் போலீசாரை அடித்து விடுகிறார்கள் சில கிரிமினல்கள்வாதிகள்.

அப்படித்தான் தஞ்சாவூரிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பெரியகோவில் மேம்பாலம் சிக்னலில் பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். அதனால் போக்குவரத்து போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.
ஆனால் 3 பேருமே செம போதையில் இருந்துள்ளனர். அதில் 2 பேருக்கு போலீஸ்காரர் மீது அதிக கோபம் வந்து, அவரது கையை முறுக்கியுள்ளனர். யாரை, என்ன, ஏன் செய்கிறோம் என்றுகூட தெரியாமல் அந்த போலீஸை போட்டு அப்படி அடித்துள்ளார்கள். அந்த பரபரப்பு காட்சியை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சி இதுதான்:
வர வர போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை தமிழ்நாட்டில்! pic.twitter.com/OOU0btacy7
— Oneindia Tamil (@thatsTamil) August 10, 2018












Click it and Unblock the Notifications