ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர் பலி!
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் சென்றுக் கொண்டிருந்த ஆதிபராசக்தி பக்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்வதை போல் மேல்மருத்தூரிலும் செவ்வாடை அணிந்து கொண்டு மாலை போட்டு மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் நடைமுறை உள்ளது.

இதை மறைந்த பங்காரு அடிகளார் கொண்டு வந்திருந்தார். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதமிருக்கும் ஆண்கள், பெண்கள் தை பூசம் வரை கோயிலுக்கு சென்று அண்டத்தை காக்கும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம்.
சபரிமலையை போல் இவர்களும் இருமுடி சுமந்து வருவர். 9 ஆண்டுகளுக்கு மேல் மாலை போட்டவர்கள் மஞ்சள் ஆடையையும் அதற்கு கீழ் மாலை போடுபவர்கள் செவ்வாடையையும் அணிந்துக் கொண்டு வர வேண்டும்.
மருவத்தூர் அம்மனை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் உள்ளூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகத்துடன் மாலை போட்டுக் கொண்டு பேட்ச் பேட்ச்சாக செல்வது உண்டு. அந்த வகையில் வாணியம்பாடியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றனர்.
அப்போது வழியில் ஆற்காடு அருகே முப்பதுவெட்டி பகுதியில் டீ குடிப்பதற்காக தனியார் பேருந்தை நிறுத்தினர். அப்போது அங்கு தாழ்வாக தொங்கிய மின்கம்பி பேருந்து மீது உரசியது. இதில் இரும்பு கம்பியில் கை வைத்து இறங்க முயன்ற அகல்யா என்ற 20 வயது பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார். இதனால் அந்த பகுதியில் சோகம் நிலவியது. அவரை சக பக்தர்களும் உறவினர்களும் எழுப்ப முயன்ற காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications