வாவ்.. தலைவி ரேஞ்சுக்கு மாறிய சசிகலா புஷ்பா.. 200 போலீஸ் புடை சூழ மதுரையை வலம் வந்தார்!!
மதுரை: ராஜ்யாபா எம்பி சசிகலா புஷ்பா மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று வருகை தந்தபோது 200 போலீசாரும் கராத்தே செல்வின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர்.
பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மதுரை உயர்நீதிமன்ற் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணைக்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சசிகலா புஷ்பா ஆஜரானார்.
அப்போது சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அதிமுகவினர் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்திவிடக் கூடாது; அப்படி நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல் வேறு கட்சியினர் ஏதேனும் போராட்டம் நடத்தி அதிமுகவினர் மீது பழிபோட்டுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையோடும் போலீசார் குவிக்கப்பட்டனராம்.
இதனால் நேற்று முன்தினம் காலையில் சசிகலா புஷ்பா மதுரை விமான நிலையத்தில் கால் வைத்தது முதல் இரவில் விமானத்தில் திரும்பிச் செல்வது வரை அவருக்கு சுமார் 200 போலீசார் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர்.
சசிகலா புஷ்பா வாகனத்தின் முன்பு பைலட் வாகனம் ஒன்றும், பின்னால் 2 பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. அவரது வாகனம் சாலையில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் செல்ல போக்குவரத்து போலீஸார் கூடவே சென்றனர்.
போலீசார் பாதுகாப்பு மட்டுமின்றி காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் தலைவர் கராத்தே செல்வினின் ஆதரவாளர்களும் சசிகலா புஷ்பாவுக்கு 'பாடி கார்டாக' பாதுகாப்பு அளித்தனர்.
ஒரு தலைவர் ரேஞ்சுக்குதான் மதுரையில் வலம் வந்தார் சசிகலா புஷ்பா!
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications