காஞ்சிபுரத்தில் லேப் டெக்னீஷியன் வீட்டில் 27 பவுன் நகை, ரூ.8,000 ரொக்கம் திருட்டு
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே லேப் டெக்னீஷியனின் வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ. 8 ஆயிரம் திருடு போயுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கிதிரிப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமிகாந்தன்(34). லேப் டெக்னீஷியன். அவரது மனைவி மீனாட்சி(30). அவர்களின் மகன் அகிலேஷ்(2). லட்சுமிகாந்தனின் வயதான பெற்றோரும் அவருடன் வசித்து வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு வீட்டை திறந்தபடியே வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். மறுநாள் காலை எழுந்தபோது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து லட்சுமிகாந்தன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்து சென்றனர்.
ஆட்கள் தூங்கிய சமயத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications