நெல்லையில் போலீஸ் வாகனத்தில் கைதி கொலை.. மேலும் 3 பேர் கைது.. மும்பை விரைந்த தனிப்படை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி சிங்காரம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் கைதி சிங்காரம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமான சிங்காரம் என்ற கைதியை, அவர் மீதான குற்ற வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக பாளையங்கோட்டை சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே, மூன்று கார்களில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்தன. காவல்துறை வாகனத்தில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்ததுடன், கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த அருள்மணி உள்ளிட்ட 8 பேர் கைதாகியுள்ளனர். கொலைக்கு அவர்கள் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு காரணமாக இருந்த சுபாஷ் பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியன் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி தனிப்படை போலீஸார் மும்பை சென்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications