என்னங்க சொல்றீங்க.. நம்ம ஊட்டி டாஸ்மாக் கடையிலா.. அதிர்ந்த குடிமகன்கள்.. மொத்தமாக சிக்கிய 3 பேர்
ஊட்டி: மதுவில் கலப்படம் செய்யப்படுவதாகவும், அதனால் முன்பு போல் தங்களுக்கு போதை ஏறுவது இல்லை என்றும் குடிமகன்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சம்பவம் நடந்துள்ளது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருவார்கள்.. இங்குள்ள மதுக்கடைகளில் மது விற்பனை பொதுவாக அதிக அளவில் நடைபெறும்.

இந்நிலையில் ஊட்டியில் போலி மதுபானங்கள் பிரச்சனை உச்சகட்டம் அடைந்துள்ளது. தண்ணீர் கலந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது விற்பனை எப்போதுமே அதிக அளவில் இருக்கிறது.. கோடை சீசன் என்பதால் இங்கு தினசரி உள்ளூர் மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மது வாங்குவார்கள்.
இந்நிலையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஊட்டி மதுக்கடைகளில் ஒரு சில நேரங்களில் போதை வஸ்துகள் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை மதுவில் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து ஊட்டியில் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் குடிமகன்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதுபற்றி சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படைக்கும் புகார் அளித்துள்ளார்கள்.
இந்த புகாரின் பேரில் கடந்த மே 6-ம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படையினர் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் டாஸ்மாக் கடையில் நேரில் வந்து ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து மதுக்கடையில் இருந்து குறிப்பிட்ட மது வகைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்கள். இதில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுவில், தண்ணீர் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.
இதைத் தொடர்ந்து மணிக்கூண்டு டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த உமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உத்தரவிட்டார். டாஸ்மாக்கில் மதுவில் கலப்படம் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications