தென்காசியில் நிலத்தகராறில் இரட்டை கொலை.. 3 பேர் கைது.. மேலும் 3 பேருக்கு வலை
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர், முதியவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ல நெட்டூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக்குமார் (27). இவர் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வருபவர் குழந்தை பாண்டி. இவரது மகன் சுரேஷ் (27). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜுக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோலுக்கு தீ வைத்து கொளுத்தினர். இது தொடர்பாக சின்னதுரை ஆலங்குளம் போலீஸில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் நேற்று இரவு தனது உறவினர்களுடன் சென்று அப்பகுதிக்கு சென்றார்.
அங்கு தெருவில் நின்றுக் கொண்டிருந்த துரைராஜை சரமாரியாக வெட்டினார். இதையடுத்து சின்னதுரை வீட்டுக்குள் புகுந்து அசோக்குமாரையும் வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த அவரது உறவினர் அருள் ஜோதிக்கு கை விரல் துண்டானது. இதையடுத்து அந்த கும்பல் தப்பி சென்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற துரைராஜ், செல்லும் வழியில் இறந்தார்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. சாம்சன், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து 2 பேரது உடலும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரமடைந்த துரைராஜ் உறவினர்கள் சுரேஷ் வீடு மீது கல்வீசி தாக்கினர். இதைத் தொடர்ந்து இந்த இரட்டை கொலை வழக்கில் சுரேஷ், குழந்தை பாண்டி- ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன், குமார் என்ற முருகன், சரவணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குழந்தைபாண்டி, மகாராஜன், குமார் ஆகிய 3 பேரை இன்று அதிகாலை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுரேஷ், ஜக்கம்மாள், சரவணன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications