Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை: 350 டன் பாட புத்தகங்களை விற்று 'ஏப்பம் விட்ட' சி.இ.ஓ அலுவலக ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில், 350 டன் எடையுள்ள பள்ளி பாடப்புத்தகங்களை விற்று 'ஏப்பம்' விட்டு, மோசடி செய்த வழக்கில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் சரவணக்குமார் கைது செய்யப்பட்டார்.

கடந்த, 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, தி.மு.க., ஆட்சியில், அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை, வினியோகிக்க அனுமதிக்க வில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது திட்டங்கள் குறித்தும், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதாக காரணம் கூறப்பட்டது.

இதையடுத்து, பழைய பாடப்புத்தகங்களை கொண்டுவந்து, மாணவர்களுக்கு வழங்க தயாராக வைத்திருந்தனர். கோவை மாவட்டத்தில் வினியோகிக்க, 350 டன் எடையுள்ள பழைய பாடப்புத்தகங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன.

அ.தி.மு.க.அரசின் முடிவுக்கு எதிராக, ஹைகோர்ட், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டதை அடுத்து, சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டத்திற்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட, 350 டன் பழைய பாட திட்ட புத்தகங்களை, அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் ஆர்.சி., ஆண்கள் பள்ளிகளில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், அவற்றை, கரையான் அரிப்பதாக, லாரிகளில் ஏற்றி சென்றனர்.

ராஜேந்திரன் சஸ்பெண்ட்

இதற்கிடையே, முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், கடந்த, 2012 ஆம் ஆண்டு அக்டோபரில், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பழைய பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக, பள்ளி கல்வி துறை, அவரிடம் விளக்கம் கேட்டது. அவர் உரிய பதில் அளிக்காததால், பள்ளி கல்வி துறை செயலர் சபீதா, விசாரணை நடத்தினார்.

பழைய பாடப்புத்தகங்களை விற்று, பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜேந்திரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

இந்த நிலையில் கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை கோவை புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும், ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வழக்குப் பதிவு

அந்த புத்தகங்களில் சுமார் 350 டன் புத்தகங்கள் மாயமானது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்துவுக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கல்வி அதிகாரிக்கு தொடர்பு

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மரியமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான வழக்கில் முன்னாள் கல்வி அதிகாரி ராஜேந்திரன், இணை ஆய்வாளர் பிரின்ஸ் சாலமன், புலியகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து சேது, இணை பள்ளி ஆய்வாளர் அருள் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக உதவியாளர் சரவணக்குமார், சிறப்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

உதவியாளர் கைது

தகவலறிந்ததும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் சரவணக்குமார் கைது செய்யப்பட்டார்.

பழைய பேப்பர் கடையில்

அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அவர் போலீசாரிடம் கூறும்போது ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும், புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வைத்திருந்த மாயமான புத்தகங்களை கோவை சிங்காநல்லூரில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடையில் ரூ. 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தோம் என்றார்.

எந்த கடையில் விற்பனை

இந்த புத்தகங்களை எப்படி பள்ளியில் இருந்து எடுத்து சென்றனர்? புத்தகங்களை வாங்கிய பழைய பேப்பர் வியாபாரி யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இத்துடன் தலைமறைவான அதிகாரிகளை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+