55 வயதில் 4வது திருமணம்: தடுத்து நிறுத்திய 3 வது மனைவி
கோவை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மூன்று திருமணங்களை மறைத்துவிட்டு 4 வது திருமணம் செய்ய முயன்ற 55 வயது நபரின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோவை மாநகராட்சி, செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் சமீம் நிஷா (வயது-28). முதல் கணவரைப் பிரிந்த இவர், இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரைச் சேர்ந்த பழ வியாபாரி ஷேக் ரசூலை (வயது-55) திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளான்.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஷேக் ரசூலுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பது சமீம் நிஷாவுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அவர் கணவருடன் வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து, சமீம் நிஷாவின் குடும்ப செலவுக்கு பணம் தருவதை நிறுத்திக் கொண்டார்.
வேறுவழியில்லாமல், சமீம் நிஷா அதே பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்த துவங்கினார். சமீம் நிஷாவை விபச்சார தொழில் செய்யுமாறு ஷேக் ரசல் வற்புறுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கு சமீம்நிஷா மறுக்கவே, அவரை கோவையிலுள்ள தாய் வீட்டுக்கு மகனுடன் அனுப்பி வைத்தார்.
கடந்த ஏழு மாதங்களாக கணவரைப் பிரிந்து கோவையில் உள்ள தாய் வீட்டில் சமீம் நிஷா வசித்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் ஷேக் ரசூலுக்கு நான்காவது திருமணம் நடைபெறவுள்ளதாக சமீம் நிஷாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை அனைத்து மகளிர் மேற்கு போலீஸில் இது குறித்துப் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, இது குறித்து திருப்பத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், கோவை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷேக் ரசலை பிடிக்க சமீம்நிஷாவுடன் திருப்பத்தூர் விரைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications