மதுரை அருகே லாரி மீது மோதி அப்பளமாய் நொறுங்கிய கார் - 4 பேர் பரிதாப பலி
மதுரை: மதுரை மேலூர் அருகே கார் மீது லாரி மோதிய சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - திருச்சி 4 வழிச்சாலையில் மேலூர் அருகே கத்தப்பட்டியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே 4 வழிச்சாலையின் ஒருபகுதியில் மராமத்து பணிகள் நடந்து வந்தன. இதனால் நேற்று அந்த சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தது. இதனால் 4 வழிச்சாலையின் ஒருபுறத்தில் இருந்த சாலையில் மட்டும் வாகனங்கள் வந்து சென்றன.
நேற்று இரவு 11.40 மணியளவில் சிவகாசியில் இருந்து வந்த ஒரு லாரியும், காரைக்குடியில் இருந்து வந்த காரும் கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த 7 பேரில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கி காரைக்குடியை சேர்ந்த அன்பரசன், சதீஷ், நந்தகுமார் ஆகிய 3 பேர் காருக்குள்ளேயே இறந்தனர். படுகாயம் அடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாண்டிய ராஜன் என்பவர் இறந்து போனார்.
மணி, அருணாசலம் உள்பட 3 பேர் மேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் காரணமாக மேலூர்-மதுரை இடையே 4 வழிச்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications