குடும்பமே ஒன்றாக தூக்கு போட்டு தற்கொலை- நாமக்கல்லில் சோகம்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இரவோடு இரவாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
நாமக்கல் அருகே ஒட்டிரெட்டிபட்டியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் நள்ளிரவு தூக்குபோட்டு தற்கொலை செய்து்கொண்டனர்.
நாமக்கல் அருகே ஒட்டிரெட்டிபட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி.இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் நள்ளிரவில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு்ள்ளனர். குடும்பத்தினர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அந்த ஊரில் சோகமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications