கோவை, நெல்லை, மதுரை, குமரி மருத்துவ கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்: மோடி
கோவை: கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். இதனால் அங்கு புதிதாக 344 எம்.பி.பி.எஸ் சீட்டுகள் உருவாகும். என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
கோவை வரதராஜபுரத்திலுள்ள நவீனப்படுத்தப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து தமிழக அரசிடம் அந்த மருத்துவமனை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் கண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், தமிழக அமைச்சர்கள் நால்வரும், பங்கேற்றனர்.
விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வணக்கம் என்று தமிழில் கூறி பேச்சை ஆரம்பித்தார். மோடி பேசியதாவது: தமிழகத்தின் வர்த்தக நகரான கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம், கூட்டாட்சி தத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, ரூ.580 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 100 எம்.பி.பிஎஸ் சீட்கள் கிடைக்கும். அதில் 25 சீட்டுகள், இஎஸ்ஐ பயனாளிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
எனது அரசு சமூக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. 6 கோடி ஊழியர்களுக்கு, இஎஸ்ஐ தனி அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக, கூடுதல் சேவைகளை இஎஸ்ஐ பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
காந்தி கொள்கை அடிப்படையில் இஎஸ்ஐ திட்டம் செயல்படுகிறது. தொழிலாளர்கள் நலனை காக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த நாட்டிலுள்ள பல கோடி தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ ஒரு வரம். 1952ம் ஆண்டு வெறும் 2 மையங்கள் மூலம் செயல்பட்ட இஎஸ்ஐ திட்டம் தற்போது 830 மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழகத்தில், 85 ஆயிரம் ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தால் பலன் பெறுகிறார்கள். அவர்கள் குடும்பத்தாரையும் சேர்த்து, தமிழ்நாட்டில் மட்டும் 28 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இஎஸ்ஐ வசதி கிடைக்கிறது. 10 இஎஸ்ஐ மருத்துவமனைகள் தமிழகத்தில் செயல்படுகிறது. 50 படுக்கை வசதி கொண்ட திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனை 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
அரசு துறை சேவை வளர்ந்துள்ளது என்பதற்கு இஎஸ்ஐ மருத்துவமனைகள் உதாரணம். ஆன்லைனில் மருத்துவ ஆவணங்கள் பராமரிப்பு, கால்சென்டர் சேவை, மருத்துவமனைகளின் சுத்தம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இஎஸ்ஐ சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும், 2 மாடல் மருத்துவமனைகளை செயல்படுத்த உள்ளது. இஎஸ்ஐ தனியார் பங்களிப்போடு செயல்படுத்தப்படும். இதயம், டயாலிசிஸ் போன்ற பல துறை சிகிச்சைகள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆயுஷ் சிகிச்சை படிப்படியாக கொண்டுவரப்படும்.
பணியாளர்களின் நலனுக்காக அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வருங்கால வைப்பு நிதிக்காக, செல்போன் ஆப் அறிமுகம் செய்துள்ளோம். வருங்கால வைப்பு நிதி பயனுக்காக சம்பள உச்சவரம்பை ரூ.6500லிருந்து, ரூ.15 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். மாதம் ரூ.1000மாவது பென்ஷன் கிடைக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி கட்டமைப்பை மாற்றியுள்ளோம்.
கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். இதனால் அங்கு புதிதாக 344 எம்.பி.பி.எஸ் சீட்டுகள் உருவாகும்.
டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை போல நாடெங்கும் பல மருத்துவமனைகளை உருவாக்க உள்ளோம். தமிழகத்திலும், அதுபோன்ற மருத்துவமனைகளை மாநில அரசு உதவியோடு விரைவில் தொடங்குவோம். இவ்வாறு மோடி பேசினார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications