நாளை முதல் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் மீன் சாப்பிடலாம்
ராமேஸ்வரம்: அசைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. மீன்பிடிக்கால தடை இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளதால் மீன்களின் விலை குறையத்தொடங்கும்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும், ஏப்ரல் 15ம்தேதி முதல் மே 29ம்தேதி வரை 45 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்படி, கடந்த ஏப்ரல் 15ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டமீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை அதிகாலை முதல் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு சென்று மீன்பிடிக்க உள்ளனர்.

இதனால் மீன் விலை குறைய வாய்ப்புள்ளது. மீன் பிடி தடைக்காலத்தில் மீன் விலை பல மடங்கு அதிகரித்ததுடன், அதன் சுவையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சென்னையில் நேற்று வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1400க்கு விற்பனையாகியது. பிற மீன்கள் 60 முதல்70 சதவீதம் விலையேற்றத்துடன் காணப்பட்டன. தடைக்காலம் நீங்கியுள்ளதால் இனிமேல் சுவை மிகுந்த மீன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் மீன்பிடிக்காலம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும். அதுவும் நீங்கிய பிறகு சந்தைக்கு மீன் வரத்து மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், அனைத்து மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம், ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல வருடங்களாக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி செய்து, இரண்டு வருடமாக மீனவர்களின் விடுதலைக்கு போராடி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications