உள்ளாட்சித் தேர்தல்: கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப் போகும் 5. 80 கோடி பேர்
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் என்று மாநிலம் முழுவதும் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற்று, உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து ஆன்-லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2.88 கோடி ஆண் வாக்காளர்கள், 2.92 பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 584 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 5.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஊரக பகுதிகளில் 1.59 கோடி ஆண் வாக்காளர்கள், 1.60 கோடி பெண் வாக்காளர்கள், 1,629 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 3.19 கோடி வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.32 கோடி பெண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 955 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 2.61 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் என்று மாநிலம் முழுவதும் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேசிய வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளை நுன்பார்வையாளர்களாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறரை லட்சம் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர். வாக்குப்பதிவின் ரகசிய தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் வாக்குச்சாவடிகளின் நடவடிக்கையை கண்காணிக்க வீடியோ பதிவு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications